Our Feeds


Monday, December 23, 2019

www.shortnews.lk

முஸ்லிம்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் - 5000ம் பொலிசார் 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

 


இந்திய மத்திய மோடி அரசு முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க சார்பில் அதன் கூட்டணிக் கட்சிகளின் பேரணி இன்று நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் கலந்து கொண்ட பலரும் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்றைய தி.மு.க பேரணியை 110 கேமராக்கள் கண்காணிப்புடன் சென்னை மாநகரக் காவல்துறை கண்காணிக்கிறது. சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி செல்லும் சாலை சந்திப்பின் ஒவ்வொரு மூலையிலும் கலவரத் தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »