Our Feeds


Tuesday, December 3, 2019

www.shortnews.lk

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்; பணியாளர் சாட்சியம் வழங்கும் வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானம்

 


வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதரக பணியாளரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல விசேட விமானம் ஒன்றை இலங்கைக்கு கொண்டுவர இராஜதந்திர வட்டாரங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு மறுத்துவிட்டதாக அறியமுடிந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்படும் தகவல்களும் தொழிநுட்ப ரீதியான சாட்சிகளும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பணியாளர் உரிய வாக்குமூலம் வழங்கும்வரை அவரை நாட்டிலிருந்து வெளியேற அனுமதி வழங்குவதில்லையென்று அரசு தரப்பு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ள சுவிஸ் அரசு , மருத்துவ காரணங்களுக்காக தமது பணியாளரை விசாரணைகளுக்கு அனுமதிக்க முடியாத நிலை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »