ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில்
இப்போதைக்கு விட்டுக்கொடுப்பை செய்யப்போவதில்லையென்று ரணில் விக்கிரமசிங்க
திட்டவட்டமாக தெரிவித்துளளார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடல்
ஒன்றின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன ,பிரேமதாஸ
ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் கட்சியை சுமார் 25 வருட
காலம் பாதுகாத்து வந்ததாகவும் ,கட்சியை
நிர்வகிக்கக் கூடிய ஒருவர் தெரிவு செய்யப்படுவரை தாமே பதவியில் தொடர்ந்தும்
இருக்கப் போவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி
இப்போதைக்கு வழங்கப்படும் அதேசமயம் அவர் சரியாக வேலை செய்து தனது திறமையை
வெளிப்படுத்தினால் கட்சித் தலைமை பதவி அவருக்கு கிடைக்குமெனவும் ரணில்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில்
மாற்றங்களை செய்வதா இல்லையா என்பதை ஆராய இன்று அக்கட்சியின் சிரேஷ்ட
உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம் ,மலிக்
சமரவிக்கிரம ,கபீர் ஹாஷிம் உட்பட்டவர்கள் கொண்ட குழு கூடவுள்ளது.
