Our Feeds


Saturday, January 11, 2020

www.shortnews.lk

பாகிஸ்தானில் பள்ளிவாயலில் குண்டுத் தாக்குதல் 14 முஸ்லிம்கள் இதுவரை பலி

 


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிவாயல் ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் மற்றும் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பல பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
"பள்ளிவாயலில் அப்பாவி மக்களை தாக்கியவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது," என பாகிஸ்தான் ராணுவ தலைவர் கமர் ஜாவித் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »