சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை சுமார் 82164 பேர் பாதிக்கப்பட்டு சுமார் 2800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கொரோனா பரவலை தடுக்க முடியாமல் இருப்பதால் அமெரிக்க மக்கள் தயார் நிலையில் இருக்குமாறு அமெரிக்கா சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
