Our Feeds


Thursday, February 27, 2020

www.shortnews.lk

மஹர பள்ளிவாயலில் சிலை வைப்பு - விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா

 


மஹர சிறை வளாக பள்ளிவாயலில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்துடன் பேசி சுமுக தீர்வு பெற்றுத் தருவதாக நீதி, சட்ட மறு சீரமைப்பு மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

மஹர பள்ளிவாயல் நிர்வாக தலைவர் துவான் முஹம்மத் ஹபீழ் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் முன்னால் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

100 வருட பழைமை வாய்ந்த குறித்த பள்ளிவாயலில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதுடன், பள்ளிவாயல் சிறை அதிகாரிகளின் ஓய்வு அறையாகவும் மாற்றப்பட்டுள்ளது. 100 வருட பழைமை வாய்ந்த பள்ளிவாயலை இந்த நிலைக்கு உட்படுத்த முடியாது என்பதை ஏற்றுக் கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா விரைவில் சுமுக தீர்வு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டார்.

பள்ளிவாயல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராணுவ புலனாய்வு பிரிவு சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »