அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீனுடைய மனைவி ஆயிஷாவுக்கு சொந்தமான கொழும்பு 06 இல் அமைந்துள்ள வீட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசேட விசாரனைகளை நடத்தி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் சுமார் 10 மணிநேரம் விசாரனைகளை மேற்கொண்ட சி.ஐ.டி யினர் இன்று மீண்டும் ரிஷாத் பதியுத்தீன் மனைவிடம் விசாரனைகளை மேற்கொள்கிறார்கள்.
சதோச நிறுவனத்திற்கு சொந்தமான ஆவணங்கள் சில வீடொன்றில் மறைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சி.ஐ.டி மேற்கொண்ட தேடுதலில் கிடைக்கப் பெற்ற ஆவணங்கள் தொடர்பிலேயே தற்போது நான்காம் மாடியில் விசாரனைகள் நடைபெற்று வருகின்றன.
