முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமென பகிரங்கமான அழைப்பு விடுத்துள்ளார் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் அதிலும் மு.கா வின் முன்னால் செயலாளர் ஹஸன் அலி விலகிச் சென்ற நேரத்தில் தான் கடுமையாக கவலையடைந்ததாகவும் தெரிவித்துள்ள ரவுப் ஹக்கீம்.
கட்சியில் இருந்து சரியாகவோ, பிழையாகவோ, நியாயமாகவோ பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் கட்சியில் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுத்தார்.
ஹக்கீமின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ஹஸன் அலி, தனி நபராக மீண்டும் வந்து கட்சியில் இணைந்து கொள்ள முடியாது என்றும் சமூக நலனுக்காக கட்சிகளாக ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஹஸன் அலி மு.கா விலிருந்து பிரிந்து சென்று வேறு ஒரு கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
