உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் புனித உம்ரா கடமைக்காக சவூதி அரேபியா செல்வோருக்கான உம்ரா விசாவை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக சவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவுகின்ற காரணத்தினால் சுகாதார அறிவுறுத்தல்களை கவனத்தில் கொண்டு சவுதி அரேபியா இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

