ஜேர்மனில் பள்ளிகள் அகதிகள் மற்றும் அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து தாக்குவதற்கு திட்டம் தீட்டிய 12 பேரைக் கொண்ட வலதுசாரிகள் குழுவொன்றை ஜேர்மன் பாதுகாப்பு துறை வலைத்து கைது செய்துள்ளது. இவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
வட்ஸ்அப் மூலமாக ஒரு குழுமத்தை உருவாக்கி இவர்கள் தம் குழுவுக்கு ஆள் சேர்த்துள்ளனர்.
53 வயதான இந்தக் குழுவின் தலைவர் கடந்த வாரம் தனது ஆதரவாளர்களிடம் ஜேர்மன் முழுவதும் 10 இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார்.
