சீனாவிலிருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவினால் பாதிக்கபப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஐரோப்பாவிலும் பரவ ஆரம்பித்த கொரோனா தற்போது அமெரிக்காவில் வேகமெடுத்துள்ளது. தற்போது வரை அமெரிக்காவில் 43 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வொஷிங்டனில் இன்று வரை 06 பேர் மரணித்துள்ளனர். உலகளவில் 58 நாடுகளில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.
