இலங்கையில் இதுவரை 2258 பேர் 16 கொரோனா பரிசோதனை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி இன்று (17) ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 1ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கை வருகை தந்த 1500 பேரில் 800 பேர் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட இராணுவ தளபதி பொது மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
