நாட்டை lockdown செய்து முடக்கும் திட்டம் அரசுக்கு இல்லையென்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக நாட்டை மூட முடியுமா? தலைவர்கள் என்பவர்கள் நாட்டை வழிநடத்த வேண்டும். இதற்கெல்லாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் குழம்பிக் கொண்டால் மக்களும் குழம்பிக் கொள்வார்கள். புத்திசாலித் தனமாக நாம் நடக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
