உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பே வெளிநாட்டினர் உள்ளிட்ட சுமார் 5000க்கு மேற்பட்டவர்கள் இலங்கை வந்துள்ளதாகவும் இவர்களின் அதிகமானவர்க்ள மேல் மாகாணம், புத்தளம், திருகோணமலை உள்ளிட்ட இடங்களில் தங்கியிருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கையின் அவதானத்திற்குறிய நாடுகளின் பட்டியலில் இருந்து சீனாவை நீக்கியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
