ஜப்பான் கால் பந்து சம்மேளனம் இன்று (17) விடுத்துள்ள விசேட அறிக்கையில் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் பிரதித் தலைவர் கோசோ தாசிமா கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமாரான காய்ச்சல் மற்றும் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து வைத்திய பரிசோதனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கோசோ தாசிமா தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்து கொண்டதினால் கால் பந்து சம்மேளனத்தின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஹோலந்து, ஐக்கிய அமெரிக்கா, மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்க கோசோ தாசிமா அண்மைய நாட்களில் வனிக பயணங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
