Our Feeds


Monday, March 2, 2020

www.shortnews.lk

சிறுமியை சீரழித்த பாதிரியாருக்கு 20 வருட சிறை தண்டனை - பாதிரியார் பதவியிலிருந்து நீக்கி அறிவிப்பு செய்தார் போப்

 


சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் அமைந்துள்ள நீண்டுநோக்கி சென் செபஸ்தியன் தேவாலயத்தின் போதகராகவும், பாடசாலையின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த ரொபின் வடக்கும்சேரி என்பவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் போப் பிரான்சிஸ்.

2016ம் ஆண்டு இவருடைய பாடசாலையில் கல்வி கற்று வந்த 16 வயது சிறுமியை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் ரொபின்.

2017ம் ஆண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி குழந்தை பெற்றெடுத்தவுடன் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. 

விபரம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியதை அறிந்த பாதிரியார் ரொபின் நாட்டிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் கொச்சி விமான நிலையத்தில் வைத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ரொபினுடைய மரபணுவும், சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணுவும் ஒத்துப் போனதினால் ரொபின் குற்றாவாளி என நிரூபணமானது. 

இந்த கொடூர குற்றத்திற்காக பாதிரியார் ரொபினுக்கு 20 வருட கடுங்காவல் சிறை தண்டனையும் 03 லட்சம் அபராதமும் விதித்து நீதி மன்றம் தீர்பளித்தது.

இந்நிலையில் பாதிரியார் ரொபின் இனிமேல் மதக் கடமைகளில் ஈடுபட முடியாத வகையில் அவரை பாதிரியார் பதவியிலிருந்து நீக்கி போப் பிரான்சிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »