கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாளை (13) முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதி வரை பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும அறிவித்துள்ளார்.
அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை முதல் இம்மாதம் 26ம் திகதி வரை மூடப்படும் என கொழும்பிலுள்ள கத்தோலிக்க மத கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.
