உலகளவில் 165 நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் 3237 பேரும், இத்தாலியில் 2503 பேரும், ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 82762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை கட்டிடத்தில் இருக்கும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 2000ம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமையின் நிலைமை படி ஸ்பெயின் முழுவதும் சுமார் 11409 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 499 பேர் இதனால் மரணமடைந்துள்ளனர்.
