Our Feeds


Sunday, March 8, 2020

www.shortnews.lk

ஆட்சி கவிழ்ப்பு சதிப் புரட்சியில் ஈடுபட்ட அரச குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட இராணுவத்தினர் பலர் சவுதியில் கைது

 


சவூதி அரேபிய மன்னர் ஸல்மானின் சகோதரர் அஹ்மத் பின் அல்-சஊத்  உள்ளிட்ட அரச குடும்ப உறுப்பினர்கள் மூவரை அதிரடியாக கைது செய்துள்ளது சவுதி பாதுகாப்பு துறை

இவர்களுடன் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் பல இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவுதியின் முடிக்குறிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானை பதவியிலிருந்து அகற்றி ஆட்சியை கைப்பற்றும் சதிப்புரட்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே மேற்கண்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இளவரசர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என அமெரிக்காவின் வோல் ஸ்டீட் ஜேர்னல் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »