Our Feeds


Sunday, March 8, 2020

www.shortnews.lk

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் 50க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பூட்டு

 


இலங்கையில் இயங்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு தேவையான மூலப் பொருட்களை சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யும் நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமான அங்கிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமையினால் இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பிரபல ஆடை உற்பத்தி நிலையங்களை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்களின் சங்கத் தலைவர் ரொஹான் லக்ஷானி தெரிவித்துள்ளார். 

சில உற்பத்தி நிலையங்கள் இம்மாதமும் இன்னும் சில நிலையங்கள் ஏப்ரல் விடுமுறையுடனும் மூடப்படவுள்ளன. 

உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டால் அங்கு வேலை செய்யும் ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »