வேகமாக பரவிய கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள சீனாவின் செயல்பாடுகளை ஆராய்ந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது குறித்த ஐந்து கோரிக்கைகளை நடைமுறைப் படுத்தினால் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் இல்லா விடில் இத்தாலியை போல் கட்டுப்படுத்த முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
1. நாட்டில் அமைந்துள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறை முகங்களில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்.
2. இன்று (16) திங்கள் கிழமை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை இவ்வாரம் முழுமைக்கும் நீடிப்பதுடன், தேவையற்ற ஒன்று கூடல்களை தடுத்தல்.
3. அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.
4. அரசாங்க மற்றும் தனியார் சுகாதார துறை ஊழியர்களுக்கு தொற்றுத் தடுப்பு வசதிகளை உரிய முறையில் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
5. அரச மருத்துவ மனைகளில் உள்ள அவசரமற்ற வைத்திய சேவை வழங்கும் காரியங்களையும் பிற்போடல் வேண்டும்.
இந்த செயல்பாடுகளை முறையாக முன்னெடுத்தால் கொரோனா தொற்றை தடுக்கலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
