Our Feeds


Tuesday, March 10, 2020

www.shortnews.lk

நீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் படுகொலையில் ஈடுபட்ட மேலும் 6 சந்தேக நபர்கள் சற்று முன் பொலிசில் சரண்

 


நீர்கொழும்பு, அன்சார் ஹோட்டலில் நேற்றிரவு தாக்குதல் நடத்தி ஒருவரை படுகொலை செய்த குழுவை சேர்ந்த மேலும் 06 சந்தேக நபர்கள் சற்று முன்னர் நீர்கொழும்பு பொலிசில் சரணடைந்துள்ளனர்.

ஏற்கனவே இன்று காலை 18 வயதுடைய இளைஞர் ஒருவரையும் பொலிசார் கைது செய்திருந்த நிலையில் மீதமுள்ளவர்கள் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கையில் எங்கும் சாராயம் அருந்த முடியும் எனக் கூறி நேற்றிரவு நீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் சாராயம் அருந்த முற்பட்ட நிலையில் ஏற்பட்ட சச்சரவில் அன்சார் ஹோட்டல் ஊழியர் ஒருவரை படுகொலை செய்த குறித்த குழுவினர் ஹோட்டல் உரிமையாளர்களான சகோதரர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »