உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலையை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கான பயணத்தை முடிந்தவரை தவிர்ந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் குழுக்களாக பயணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணங்களையும் ரத்து செய்து கொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
