உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை சவுதி அரேபிய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஹஜ் கடமைகளில் கொரோனா தாக்கம் செலுத்த வாய்புள்ளதாகவும் வெளிநாடுகளுக்கு சவுதியினால் வழங்கப்படும் கோட்டாவில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஹஜ் முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்களை பயம் காட்சி முற்பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக அறியக் கிடைப்பதாகவும் எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி வரை ஹோட்டல்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதினால் நிலைமைகளை அவதானித்து முகவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரிகர்கள் எவறும் முகவர் நிலையங்களுக்கு முற்பணம் செலுத்த தேவையில்லையென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
