
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு முதன் முதலில் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த 52 வயதான சுற்றுலா வழிகாட்டி குணமடைந்துள்ளதாக சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றுலா வழிகாட்டி கடந்த சில நாட்களில் இத்தாலி சுற்றுலா குழுவுக்கு சேவைகளை வழங்கியிருந்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க நேற்று (16) ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் கிட்டத்தட்ட குணமடைந்து வருவதாக தெரிவித்திருந்தார்.