Our Feeds


Thursday, March 5, 2020

www.shortnews.lk

மைத்திரிபால சிரிசேனவுக்கு மொட்டு சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டாம் - மஹிந்தவின் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை

 


தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என பொது ஜன பெரமுனவின் முக்கிய பிரமுகர்கள் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் மாவட்ட அரசியல்வாதிகளை இலக்கு வைத்து மைத்திரி பேசும் கருத்துக்கள் சர்சைகளை உண்டாக்கி வரும் நிலையில் அவை எதிர்வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கக் கூடும் என்றும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மைத்திரியின் நடத்தைகளினால் அதிருப்தியுற்றுள்ள சுதந்திர கட்சியை சேர்ந்த தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொலன்னறுவை மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று அடுத்த பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளும் நோக்கத்திலேயே மைத்திரி செயல்படுகிறார் என்றும் ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிய முடிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »