உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அச்சுறுத்தி வரும் நிலையில் தேர்தலை நடத்துவது ஒழுக்கமானதல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
பருப்பு மற்றும் டின் மீன்களின் விலைகளை குறைப்பதினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாது. முழு நாட்டையுமே வைத்திய கண்காணிப்பு நிலையமாக மாற்றினால் மட்டும் தான் தேர்தலை நடத்த முடியும்.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
