கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக கந்தக்காடு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கும் பொலன்னறுவை சோமாவதியவுக்கு யாத்திரை சென்ற ஒருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்றும் சோமாவதிக்கு யாத்திரை சென்ற நபர் 10 நாட்களுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் அங்கொட IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
