Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

பங்களாதேஷில் தடையை மீறி பிரார்த்தனை கூட்டம் - கொரோனா அதிகம் பரவும் அபாயம்

 


கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையிலான பிரார்த்தனை கூட்டம் ஒன்று நேற்றைய தினம் பங்களாதேஷின் ராய்ப்பூர் நகரில் அரசாங்கத்தின் தடையை மீறி நடத்தப்பட்டுள்ளது.

இதில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் கூட்டங்களுக்கு சர்வதேச அளவில் பல நாடுகளும் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி நடத்தப்பட்ட இந்த நிகழ்வினால் பங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இதுவரை பங்களாதேஷில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணித்துள்ளதுடன் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »