நான் இதுவரை ஆய்வு செய்த நோய்களிலேயே கொரோனா தான் மிகவும் ஆபத்தானது என கொரோனா பற்றி ஆய்வு மேற்கொள்ளும் டாக்டர் ரிச்சட் ஹாட்செட் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்காசிய நாடான தென்கொரியா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் ஆகிய நாடுகளில் மிக வேகமாக கொரோனா பரவி வருகின்றது.
நேற்று சீனாவில் கொரோனா காரணமாக 17 பேர் உயிரிழந்தனர். 100க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா காரணமான மொத்தமாக இன்று (10) வரை 4018 பேர் பழியாகியுள்ளதுடன், 1,13009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்த்தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து தயாரித்து வரும் பிரித்தானியாவை சேர்ந்த டாக்டர் ரிச்சட் ஹாட்செட் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் மருந்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
டாக்டர் ரிச்சட் ஹாட்செட் உலக தொற்று நோய்கள் தொடர்பாக ஆய்வு நிறுவனத்தின் (CEPI) தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்.
கொரோனா நோய் பரவல் குறித்த இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் “உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்டையில் தான் கொரோனா தொற்றை குறைக்க முடியும். இபோலா, மற்றும் நிபா போன்ற வைரஸ் தொற்று காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆனால் அவற்றின் தாக்கம் கொரோனா அளவுக்கு பாரதூரமானதாக இல்லை.
நான் ஆய்வு செய்ததிலேயே கொரோனா வைரஸ் தான் மிகவும் ஆபத்தான வைரஸ் ஆகும் என்கிறார் டாக்டர் ரிச்சட் ஹாட்செட் அவர்கள்.
டாக்டர் ரிச்சட் ஹாட்செட் தலைமை தாங்கும் உலக தொற்று நோய்கள் தொடர்பாக ஆய்வு நிறுவனம் கொரோனாவுக்கான மருந்தை கண்டு பிடிப்பதற்காக பிரிட்டன் அரசு 200 கோடி நிதியை இவர்களுக்கு வழங்கியுள்ளது.
