Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

கொரோனா வைரஸ் தொடர்பில் அலட்சியமாக செயல்படும் நாடுகள் நெருப்புடன் விளையாடுகின்றன - WHO கடும் எச்சரிக்கை

 


உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் சில நாடுகள் அலட்சியமாக செயல்படுகின்றன என்றும் இந்த அலட்சியம் நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானதாகும் என உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோயை கண்டறியும் பரிசோதனைகளை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் யார் என அதிகாரிகளுக்கு தெரியாவிட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்றும் கொரோனா தொற்று உலகலாவிய சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »