Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

ரிஷாதுடன் சமரசம் - அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் YLS ஹமீத் போட்டி

 


ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது. 

அம்பாறை மாவட்ட அணியின் முதன்மை வேட்பாளராக அ.இ.ம.க வின் முன்னால் செயலாளர் கல்முனையை சேர்ந்த YLS ஹமீத் களமிறங்கவுள்ளார்.

அ.இ.ம.க வின் செயலாளராக செயல்பட்ட YLS ஹமீத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கட்சியின் செயலாளராக சுபைர்தீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக YLS ஹமீத் நீதி மன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் மயில் சின்னம் தொடர்பில் சர்சை எழுந்ததினால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற சமரச ஒப்பந்தத்தில் ரிஷாத் பதியுத்தீன், அமீர் அலி மற்றும் YLS ஹமீத் ஆகியோர் கையெழுத்திட்ட பின்னர் மயில் சின்னத்தில் அ.இ.ம.க வில் YLS ஹமீத் போட்டியிடுகிறார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »