அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைநேற்றிரவு எட்டிய நிலையில், உலகில் ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புக்களை சந்தித்த முதலாவது நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்றிரவு வரை உலகளாவிய ரீதியில் 56 லட்சத்து 37 ஆயிரத்து 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கொரோனா தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 04 ஆயிரத்து 977ஆக அதிகரித்துள்ளது
உலகளாவிய ரீதியில் 28 லட்சத்து 83 ஆயிரத்து 248 பேர் வைத்தியசாலைகளில்
சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் 53 ஆயிரத்து 209 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எஞ்சிய 28 லட்சத்து 30 ஆயிரத்து 39 பேர் குணமடைந்து வருவதாக சர்வதேச கொரோனா தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவிலேயே அதிகளவிலான கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்றிரவு வரையான தரவுகளின் அடிப்படையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.7 மில்லியனை தாண்டியது.
இதன்படி, அமெரிக்காவில் 17 லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு லட்சத்து 30 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவினால் ஒரு லட்சத்தை தாண்டிய உயிரிழப்புக்கள் பதிவான முதலாவது நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது,
அமெரிக்காவில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 673 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11 லட்சத்து 44 ஆயிரத்து 301 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வருவோரில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலைமை அமெரிக்காவில் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பிரேஸில் நாட்டிலேயே அதிகளவிலான
கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, பிரேஸில் நாட்டில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 23 ஆயிரத்து 606 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களில் மூவாயிரத்து 807 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 37 ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளதுடன், அங்கு 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை நேற்றிரவு எட்டியது.
இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 349 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
