கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளான கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை ,ஜா எல,சுதுவெல்ல பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேங்களாக இனியும் இருக்கமாட்டாதென இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இப்போது நாட்டில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் எதுவும் இல்லையென அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 10 பேரில் 8 பேர் கடற்படைச் சிப்பாய்கள் என்றும் மற்ற இருவர் அவர்களுடன் பழகியவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
