ஆறுமுகன் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்படுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சரவை பேச்சாளர்களான உயர் கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது
அமைச்சரவை தீர்மானங்கள் வருமாறு ,
தோட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகமொன்றை ஏற்படுத்துவது ஆறுமுகம் தொண்டமானின் விசேட எதிர்பார்ப்பாக இருந்ததுடன், இதுவரையில் அது தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் போது கொட்டகலை தேசிய பல்கலைக்கழகமொன்றும் சந்ததென்ன என்ற இடத்தில் விசேட பட்டய பல்கலைக்கழகமொன்றும் அம்பேவல தாவரவியல் உயிரியல் கட்டமைப்பு பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பதற்காக எதிர்வரும் வாரத்தில் கல்வி அமைச்சினால் அமைச்சரவைக்கு ஆவணமொன்று
சமர்ப்பிக்கப் படவுள்ளது.
