சவூதி அரேபியாவில் , பள்ளியில் தொழுவதற்க்குரிய வழிகாட்டல்கள்களையும், நிபந்தனைகளையும் அந்நாடு அறிவித்துள்ளது. அதற்கமைய கீழ்க்கானும் வழிமுறைகளை பின்பற்றி சவுதியில் பள்ளிவாயல்களில் பொது மக்கள் தொழுகையில் கலந்து கொள்ள முடியும்.
(1) வருவதற்க்கு முன்பு கைகளை நன்றாகக் கழுகவேண்டும்.
(2) வயோதிபர்கள் , நாட்பட்ட நோய்யுள்ளவர்கள் வீட்டில் தொழவேண்டும்.
(3) பள்ளியில் உள்ள குர்ஆனில் ஓதக்கூடாது . வீட்டிலிருந்து கொண்டுவரலாம்.
(4) வீட்டிலிருந்து " முசல்லா" கொண்டுவரவேண்டும்.
(5) சப்பில் அடுத்தவரை விட்டும் இரண்டு மீட்டர் தூரத்தில் நிற்கவேண்டும்.
(6) 15 வயதுக்கு குறைவான பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வரக்கூடாது.
(7) "துணியால்" செய்யப்பட்ட முகமூடி அணியவேண்டும்.
(8) வீட்டில் வுழுச் செய்யவேண்டும்.
(9) கைலாகு கொடுக்கக் கூடாது.
(10) பள்ளியில் நுழையும் போதும் , வெளியேறும் போதும் நெரிசலைத் தவிர்க்க வேண்டும்.
