மறைந்த ஆறுமுகன் தொண்டமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களிடமிருந்து ஏதேனும் கோவிட் - 19 பாதிக்கப்பட்ட நபர்கள் புகாரளிக்கப்பட்டால், அல்லது ஒரு புதிய நோயாளி அடையாளம் காணப்பட்டார் எனில், தேசிய அளவில் மற்றும் மற்றும் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளின கடமைகளை இடையூறு, தொந்தரவு செய்யும நபர்களுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.
