Our Feeds


Monday, June 1, 2020

www.shortnews.lk

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் அனுமதி - நிபந்தனைகள் விதிப்பு

 


இலங்கையில் இன்று (01) முதல் ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், திருமண நிகழ்வில் மூன்றில் ஒரு பகுதியினரே கலந்து கொள்வதற்கு ஹோட்டல்கள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலா துறையினை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுகாதார அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »