பொசன் போயா தினத்திற்குப் பிறகு, தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினை முழுமையாக நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமும் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமுல்படுத்தப்படும் ஊரங்கு உத்தரவுகளை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதனால் மேற்படி
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை ஜூன் மாதம் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
