உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரனைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனைக்கு இன்று பிற்பகல் 12.30 க்கு இரண்டு பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
குற்ற விசாரணை பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க மற்றும் பம்பலபிட்டியவில் வசிக்கும் மொஹமட் ஜிப்ரி மொஹமட் உசைன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (01) பிற்பகல் 12.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் மீண்டும் கடந்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடதக்கது.
