Our Feeds


Wednesday, July 22, 2020

www.shortnews.lk

பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

 



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

2016 ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை விசாரணை செய்யததன் அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொலவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கவனயீனமாக முறையில் வாகனத்தை செலுத்தி நபர் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியமை குற்றமாக சுட்டிக்காட்டப்பட்டு குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »