புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் இன்று ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவி பெற்றுக் கொள்ளவிருந்த முன்னால் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிலையில் இராஜாங்க அமைச்சு பொறுப்பை நிராகரித்து தலதா மாளிகை வளாகத்திலிருந்து விஜேதாச ராஜபக்ஷ வெளியேறியுள்ளதாக மாற்று மொழி செய்தித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
40 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 39 பேர் மாத்திரமே பதவியேற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
