Our Feeds


Tuesday, August 11, 2020

www.shortnews.lk

ஞானசாரரின் MP கனவுக்கு ஆப்பு - கட்சியின் செயலாளர் யார் என்பதை முதலில் முடிவெடுங்கள் அதன் பின் MP யார் என முடிவெடுக்கலாம் - தே.ஆ

 

“அபே ஜன பல பக்சய” என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்ட அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களின் கட்சி நாடு முழுவதும் 17 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 67 ஆயிரம் வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தது. 


இதனால் குறித்த கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.


இந்த நிலையில் குறித்த தேசிய பட்டியல் ஆசனத்தின் வழியாக பாராளுமன்றம் செல்வதற்கு அத்துரலியே ரத்ன தேரர், ஞானசார தேரர், மற்றும் அபே ஜன பல கட்சியின் செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோர் மத்தியில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.


ஞானசார தேரர் தானே குறித்த ஆசனத்திற்கு பாராளுமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.


ரத்ன தேரர் தான் அந்த ஆசனத்தின் மூலம் பாராளுமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.


கட்சியின் செயலாளர்  தானே குறித்த ஆசனத்திற்காக உறுப்பினர் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


இதே வேலை கட்சியின் செயலாளரை பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாகவும் தானே அந்த ஆசனத்தினால் பாராளுமன்றம் செல்லவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


இந்நிலையில் கட்சியின் செயலாளர் யார் என்பதையும், அதன் பின்னர் குறித்த ஆசனத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதையும் குறித்த கட்சியினர் சட்டத்தின் அடிப்படையில் முடிவெடுத்த பின்னரே அக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் யார் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் அறிவிக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த கட்சியினருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »