Our Feeds


Tuesday, September 8, 2020

www.shortnews.lk

ஜமால் கஷோகி கொலை வழக்கு 08 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை - சவுதி அறிவிப்பு

 

 


சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய எட்டு பேரை ஏழு முதல் 20 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


சவூதி மகுட இளவரசர் முகமது பின் சல்மானின் விமர்சகரான கஷோகி இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்கு சென்றதாகவும், அங்கு அவரது உடல் துண்டிக்கப்பட்டு கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


எனினும் அவரது எச்சங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.


இந்த கொலை உலகளாவிய சலசலப்பை ஏற்படுத்தியதுடன், இராஜ்யத்தின் உண்மையான ஆட்சியாளரும், சல்மானின் மன்னரின் மகனுமான இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


இதன் பின்னர் இக் கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் சுதந்திரமாக இருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் மற்றும் மனித உரிமை குழு அதிகாரிகள் கடும் விமர்சனங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.


இந் நிலையிலேயே இந்த கொலைக் குற்றச்சாட்டுன் தொடர்புடைய ஐவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பேருக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும் சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குற்றவாளிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.


கஷோகி குடும்பத்தின் சட்டத்தரணி இந்த அறிவிப்பு தொடர்பில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கஷோகியின் குடும்பம் நியாயமான தீர்ப்பை வரவேற்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »