Our Feeds


Monday, September 7, 2020

www.shortnews.lk

காத்தான்குடியில் ரம்புட்டான் நட்ட முடியாது. பேரிச்சை மரம் தான் நட்ட முடியும் - ஊடகங்களிடம் ஹிஸ்புல்லாஹ் காட்டம்

 


பெட்டிக்களோ பல்கலைக் கழக உருவாக்கத்திற்கு பணம் வந்த விதம் மற்றும் அதற்குறிய காணிகளை கொள்வனவு செய்த விதம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அதே வேலை பெட்டிக்களோ பல்கலைக் கழகத்தில் அடிப்படைவாத செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக கதையாடல்கள் இருந்ததே என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அவை அத்தனையும் முழுவதும் பொய்யான தகவல்கள் என மறுத்தார்.


அதே போல் கடந்த வருடம் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பின் சிலரை விமான நிலையத்தில் அழைத்து சென்று நீங்கள் வழியனுப்பி வைத்து விட்டு வந்ததாக வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் என்ன சொல்கிறீர்கள் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னால் ஆளுனர் அவர்கள் குறித்த நபர்கள் தான் ஆளுனராக இருக்கும் போது கிழக்கு மாகாணத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றுக்காக வருகை தந்திருந்தவர்கள் அவர்களுக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது என்றார்.


பயங்கரவாதி ஸஹ்ரானுடன் நீங்கள் தொடர்புகளை பேணவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னால் ஆளுனர் அவர்கள் நான் அவரை ஒரே ஒரு முறை தேர்தலில் ஆதரவு கேட்டு சந்தித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல பல அரசியல்வாதிகளும் அவரை சந்தித்திருக்கிறார்கள் என்றார்.


அப்படியானால் காத்தான்குடியில் ஏன் பேரிச்சை மரங்களை நட்டினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னால் ஆளுனர் அங்குள்ள கால நிலைக்கு பேரிச்சை மரம் தான் நாட்ட முடியும். ரம்புட்டான் மரமா நாட்ட முடியும்? என பதிலளித்தார்.


அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இதன் போது முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »