Our Feeds


Thursday, September 3, 2020

www.shortnews.lk

Google இல் ஆபாசத்தை தேடும் நாடுகளில் இலங்கை 2ம் இடம், - வடமத்திய மாகாணம் முதலிடம், நகரங்களில் கொழும்பு முதலிடம்

 



2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகிளில் Sex (‘செக்ஸ்’) எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் எத்தியோப்பியா  முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன.


இவ்வரிசையில் எத்தியோப்பியாவை தொடர்ந்து இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன.

இதற்கு முன்னர் கூகிளினால் வெளியிடப்பட்ட வருடாந்த பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தையும் கடந்தாண்டு (2019) ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது

அத்தோடு, 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகிளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தை வகித்து வந்தது.

கூகிளின் கடந்த 2012ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம்,  ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகிப்பதோடு, 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்திலுள்ளது.

குறிப்பாக வடமத்திய மாகாணத்தில் கட்டுவன்வில, கல்கடவெல, இராஜாங்கனை, புல்மோட்டை, பூனாவை ஆகிய நகரங்கள் முன்னிலையிலுள்ளன.   

கூகிளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை அதிகளவில் தேடிய மாகாணங்களின் வரிசையில் முறையே ஊவா, வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மத்திய மாகாணங்களும் நகரங்களில் முறையே சியம்பலாண்டுவ, தேராவில், மஹாஓயா, பொரலுவகே அய்னா, ஹோமாகம, மேல் புளியங்குளம், வருகந்தெனிய, ஹரஸ்பெத்த ஆகியனவும்  அடங்குகின்றன.

சமூக சீர்கேட்டின் உச்சத்சை நோக்கி இலங்கை சமூகம் பயணிப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. - பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பாதுகாப்பதிலும், குறிப்பாக பிள்ளைகளின் மொபைல் தொடர்பாடல்கள் விஷயத்திலும் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »