Our Feeds


Tuesday, September 8, 2020

www.shortnews.lk

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று MP யாக பதவிப் பிரமானம்

 



விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம்(08) பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(07) அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது.

இதேவேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்றுகூடவுள்ளனர்.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »