Our Feeds


Friday, December 25, 2020

www.shortnews.lk

கொழும்பில் நேற்று வரை கொரோனாவினால் 101 பேர் மரணம்.

 



(எம்.ஆர்.எம்.வஸீம்)


கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்றுவரை (24) கொரோனா தொற்றாளர்கள் 11, 226 பேர் இனம் காணப்பட்ட நிலையில் 101 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர எல்லைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்மார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு மாநகர எல்லைக்குள் 58,035 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 950 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 150 ரெபிட் என்டிஜன் பரிசோதனை இடம்பெற்றது. புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 89 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 20 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »