Our Feeds


Friday, December 25, 2020

www.shortnews.lk

சிறைகளில் 3, 611 பேருக்கு கொரோனா: அதிக தொற்றாளர்கள் மெகஸினில்!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது. புதிய நோயாளர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்தது.


இந்த மொத்த தொற்றாளர்களில் மெகசின் சிறைச்சாலையிலேயே அதிக எண்ணிக்கையானோர் பதிவாகியுள்ளனர்.மெகசின் சிறைச்சாலையில் இதுவரை 824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 813 பேருக்கும் மஹர சிறைச்சாலையில் 745 பேருக்கும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 390 பேருக்கும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 58 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி இதுவரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காண்சப்ப்ட்டுள்ளவர்களில் இதுவரை 2,857 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »