பொல்கஹவெல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பந்தாவை மற்றும் மடுலுகம ஆகிய இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 17ம் திகதி பந்தாவையில் மரணித்த முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புகளை பேணியதாக கூறப்பட்டவர்களின் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவில் மரணித்ததாக கூறப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
